home remedies for thyroid

What are the best home remedies for treating thyroid disease?

தைராய்டு பிரச்சனையை சரி செய்வதற்கான ஹோம் ரெமடியை பற்றி பார்ப்போம்.

அஸ்வகந்தா

ashwagandha-scaled

     பல நூற்றாண்டு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் ஒரு முக்கியமான ஒரு பொருள் இந்த அஸ்வகந்தா ஆகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை சீராக்குகிறது. இந்த அஸ்வகந்தா வை பவுடர், மாத்திரை, தேநீர் போன்றவற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது.

     இந்த அஸ்வகந்தா தேநீர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் அளவு அஸ்வகந்தா பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

     இப்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். இப்பொழுது அதை வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து பருகலாம். இந்த அஸ்வகந்தாவானது தைராய்டு செயல்பாட்டை சீராக்குகிறது.

சௌ சௌ ஜூஸ்(chow chow vegetable)

chow chow thyroid disease

     இந்த சௌ சௌ ஆனது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும் ஒரு பாரம்பரிய தீர்வாகும். இந்த காயில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள்  உள்ளது. இந்த சௌ சௌ ஜூஸை தொடர்ந்து குடிப்பதன் மூலம் தைராய்டு ஹார்மோன்களை சீராக்கவும் மற்றும் ஒட்டுமொத்த தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

    ஒரு நடுத்தர அளவு சௌ சௌ காய் எடுத்து சுத்தமாக கழுவி தோலை சீவி கொள்ள வேண்டும். பிறகு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த ஜூஸை வடிகட்டியில் நன்கு வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும் இப்பொழுது சௌ சௌ ஜூஸ் தயார். இந்த ஜூஸ் ஆனது தைராய்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

கொத்தமல்லி விதை தேநீர்

coriander seeds

      கொத்தமல்லி விதை என்பது நம் சமையலில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த ஒரு வாசனைப் பொருள் ஆகும். இந்த கொத்தமல்லி விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு செயல்பாடு ஆனது சீராகிறது. இவற்றில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை ஒட்டுமொத்த தைராய்டு ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

      கொத்தமல்லி விதை 250 கிராம் அளவு எடுத்துக்கொண்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்து வைத்த கொத்தமல்லி விதையை சேர்க்க வேண்டும். இப்பொழுது இரண்டு கப் அளவு தண்ணீர் ஒரு கப் அளவாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். இப்பொழுது இதை வடிகட்டி சிறிது வெல்லம் அல்லது சிறிது கருப்பட்டி சேர்த்து பருகி வரலாம்.

முளைவிட்ட கொண்டைக்கடலை

channa sprouts thyroid disease

     முளைவிட்ட கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவை தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது மற்றும் தைராய்டு ஆரோக்யத்தை மேம்படுகிறது. கொண்டைக்கடலையை அப்படியே சாப்பிடாமல் அதை தண்ணீரில் ஊறவைத்து முளைவிட்டதும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

      இந்த தைராய்டுக்கான ஹோம் ரெமடியுடன் சேர்த்து தைராய்டிற்கான உணவு பட்டியலையும் பின்பற்ற வேண்டும். மேலும் இதனுடன் சிறிது உடற்பயிற்சி, யோகா, போதுமான அளவு உறக்கம், மன அழுத்தத்தை தவிர்த்தல் ஆகியவற்ற செய்வதன் மூலம் தைராய்டுசெயல்பாட்டை சீராக்கலாம்.

நன்றி !!

Share

Leave a Reply