symptoms of boy baby

Symptoms of boy baby during pregnancy

     கர்ப்பம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அந்த தருணத்தின் போது அதிக உற்சாகமும், எதிர்பார்ப்பும் கொண்டிருப்பார்கள்.

    எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தனது வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று அதிக எதிர்பார்ப்பும், ஆசையும் இருக்கும்.

    ஆனால் இன்றைய காலகட்டத்தில் சட்டரீதியாக வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தெரிவிப்பதை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து நம் வயிற்றில் வளர்வது ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறியலாம்.

     இப்பொழுது வயிற்றில் உள்ளது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

இதயத்துடிப்பு

       பொதுவாக வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை இருக்கும். குழந்தையின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு 140-ற்கும் கீழ் இருந்தால் அது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம். இது எவ்வாறு கண்டறிவது என்றால் உங்களது முதல் ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்து கடைசி ஸ்கேன் ரிப்போர்ட் வரை ஒப்பிட்டுப் பார்த்தால் இதயத்துடிப்பானது குறைந்து கொண்டே வந்திருக்கும். அவ்வாறு குறைந்து கொண்டே வந்து 140 க்கும் கீழே இருந்தால் அது ஆண் குழந்தையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

வயிற்றின் வடிவமைப்பு

       கர்ப்பிணியின் வயிறானது ஒரு முட்டையை போல் முன்னோக்கி உருண்டையாக இருந்தால் அது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் அடி வயிறானது பெரிதாகவும், கீழ்நோக்கியும் இருக்கும்.

காலை சோம்பல்

      காலை நேரத்தில் எந்த ஒரு சோம்பலும் இல்லாமல் சுறுசுறுப்பாக இருந்தால் வயிற்றில் ஆண் குழந்தை இருக்க வாய்ப்புள்ளது.

முகத்தோற்றம்

      கர்ப்பிணியின் முகம் ஆனது மிகவும் வாட்டமாகவும், அதிக பருக்களும் இருக்கும். மேலும் கண்ணிற்கு கீழேயும், கழுத்தை சுற்றியும் சிறிது கருமை நிறமாக படர்ந்து இருக்கும். இவ்வாறு இருந்தால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

மார்பக அளவு

      ஒரு பெண்ணின் மார்பகமானது கர்ப்பம் தரித்த உடனே பெரிதாக ஆரம்பிக்கிறது. அதுவும் இடது மார்பகத்தை விட சற்று வலது மார்பகம் பெரிதாக இருந்தால் அவை ஆண் குழந்தைக்கான ஒரு முக்கிய அறிகுறி ஆகும்.

சுவைத்தன்மை

      வயிற்றில் ஆண் குழந்தை இருப்பதற்கு வாய்ப்பு இருந்தால் அவர்கள் புளிப்பு மற்றும் காரம் போன்ற சுவைகளை விரும்புவார்கள்.

சிறுநீரகத்தின் நிறம்

       சிறுநீரகத்தின் நிறமானது அடர் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

     இதில் உள்ள அறிகுறிகள் 80 சதவீதம் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் குழந்தை கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி !!

Share

Leave a Reply