foods to avoid during pregnancy

Foods that must be avoid during pregnancy

கர்ப்ப காலத்தில் கட்டாயமாக பெண்கள் எடுத்துக்கொள்ள கூடாத உணவுகளை பற்றி விரிவாக காண்போம்.

      கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணிற்கு அதிக சந்தோஷமும், எதிர்பார்ப்பும் நிறைந்த ஒரு காலமாக அமைகிறது. அந்த காலகட்டத்தில்  தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். 

     கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உணவுகள் சில இருந்தாலும் தவிர்க்க வேண்டிய உணவுகளும் சில உள்ளது. எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் அதை எதனால் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

பச்சை இறைச்சி (Raw meat)

raw meat

       வேகவைக்கப்படாத இறைச்சியை உண்ணக்கூடாது. ஏனென்றால் அவற்றில் சால்மோனெல்லா, லிஸ்டீரியா  போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். ஆதலால் அவை தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே வேகவைக்கப்படாத இறைச்சியை உண்ணக்கூடாது. தேவையான வெப்பநிலையில் இறைச்சியை வேகவைத்து உண்பது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தைக்கும் நல்லது.

Raw sprouts

raw sprouts avoid foods during pregnancy

      முளைகள் தானியங்களில் இருந்து வளர தொடங்குவதற்கு முன்பு பாக்டீரியாவானது அதன் விதைகளுக்குள் நுழைகிறது. எனவே முளைகட்டிய பயிர்களை முறையாக சமைத்து உண்ண வேண்டும்.

வேக வைக்கப்படாத முட்டை (Raw egg)

raw egg avoid foods during pregnancy

       வேக வைக்கப்படாத முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இது கருவில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே நம் வீட்டில் செய்த மயோனைஸ், அரைவேக்காடாக சமைத்த முட்டை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்படாத பால் பொருட்கள் (unpasteurized milk)

      பச்சை பால், மென்மையான பாலாடை கட்டி போன்ற unpasteurized பால் பொருட்களில் லிஸ்டீரியா போன்ற நோய் தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா இருக்கலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் pasteurized பால் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

காஃபின் பொருட்களை குறைத்துக் கொள்ளுதல்

tea and coffee

      பொதுவாக கர்ப்ப காலத்தில் குறைந்த அளவு காஃபின் (தேநீர், காபி, குளிர் பானங்கள்) எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. அதுவே அதிக அளவு காஃபின் உட்கொள்வது கருச்சிதைவு மற்றும் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளும் காஃபின் அளவை விட குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

அதிக பாதரசம் நிறைந்த மீன்களை உண்ணக்கூடாது

high mercury fish avoid foods during pregnancy

      சுறா, வாள்மீன், கிங் கானாங்கெளுத்தி போன்ற கடல் மீன்களில் பாதரசம் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. அதிக பாதரசமானது கருவில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. கர்ப்ப காலத்தில் இந்த வகையான கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இறால், சால்மன், கெளுத்தி மீன் போன்ற மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.

மது அருந்துதலை தவிர்க்க வேண்டும் 

      கர்ப்பிணி பெண்கள் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள ஆல்கஹால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்தல் 

       பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகியவை உள்ளது. இது கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய், அதிக அளவு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுகிறது. இவை பிரசவத்தின் போது பல சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

நன்றி !!

Share

Leave a Reply