paneer butter masala

Tasty and spicy paneer butter masala recipe

ரெஸ்டாரன்ட் ட்ரைல் பன்னீர் பட்டர் மசாலா

       சப்பாத்தி என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது அதற்கேற்ற சைடிஸ் இந்த பன்னீர் பட்டர் மசாலா தான். ஹோட்டலில் சாப்பிட்டிருப்பீர்கள் அதே சுவை மாறாத பன்னீர் பட்டர் மசாலா இனி வீட்டிலேயே செய்யலாம். ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

  • பன்னீர் 200 கிராம் 
  • பட்டை ஒரு துண்டு 
  • கிராம்பு 2
  • ஏலக்காய் 3
  • சீரகம் 2 டீஸ்பூன் 
  • பெரிய வெங்காயம் 3 
  • தக்காளி 4 
  • பூண்டு 7 பல் 
  • இஞ்சி சிறிய துண்டு 1
  • பச்சை மிளகாய் சிறியது 3
  • பிரியாணி இலை 1
  • முந்திரி 20 கிராம் 
  • காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன் 
  • மல்லித்தூள் 2 டீஸ்பூன் 
  • கரம் மசாலா 2 டீஸ்பூன் 
  • பிரஸ் கிரீம் ஒரு டேபிள் ஸ்பூன் 
  • வெண்ணெய் 50 கிராம் 
  • ஆயில் 20ml
  • கஸ்தூரி மேத்தி ஒரு டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி சிறிதளவு

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை

      ஒரு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கடாய் சூடு ஏறியதும் அதில் சிறிது ஆயிலை ஊற்றி பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 3, கிராம்பு 2, சீரகம் 2 டீஸ்பூன் இவற்றை சேர்த்து வதக்கவும். அதில் 2 பெரிய வெங்காயம் மற்றும் 4 தக்காளி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் 2 சிறிய பச்சை மிளகாய், 20 கிராம் முந்திரி, 7 பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது இந்த பன்னீர் பட்டர் மசாலாவுக்கு தேவையான கலவை ரெடியாகிவிட்டது. இவற்றை ஆற வைத்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

       இப்பொழுது மற்றொரு கடாய் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கடாய் சூடு ஏறியதும் அதில் 30 கிராம் அளவுள்ள பட்டரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை சூடேறியதும் அதில் ஒரு பிரியாணி இலை பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள ஒரு பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள ஒரு சிறிய பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும். அவை வதங்கியவுடன் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள், 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

     இந்தக் கலவை நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை வேக விட வேண்டும். இப்பொழுது எண்ணெய் பிரிந்து வந்ததும் நாம் மீதம் வைத்துள்ள 20 கிராம் பட்டரை சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து 200 கிராம் நறுக்கி வைத்துள்ள பன்னீரை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தியை கையிலே பொடி செய்து தூவி விட வேண்டும். 

     அடுப்பை அணைத்துவிட்டு ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாற வேண்டும். இப்பொழுது சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.    

இது போன்று நிறைய சமையல் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் பக்கங்களை பின்தொடரவும்.

நன்றி !!

Share

Leave a Reply