Payanali women care PCOS PCOD Prostate Cyst Symptoms

Pcod and Pcos Prostate Cyst Symptoms

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைக்கான அறிகுறிகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம் .

கர்ப்பப்பையில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை சினைப்பை நீர்க்கட்டி தான். இதனால் நமக்கு கர்ப்பம் அடைவதில் தாமதமாகிறது, பொதுவாக பெண்கள் பருவம் அடைந்ததும் அவர்களுடைய உடம்பில் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும். இது சிலருக்கு சரியாக அமைவதில்லை, இதனால் ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆக மாறுகிறது, இதை நாம் PCOD என்று கூறுகிறோம். இதனால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள், முதலில் உடல் எடை கூடுதல். இதுவே இதன் முதல் அறிகுறியாகும்.

பொதுவாக ஒரு வருடத்திற்கு, ஒன்பது மாதங்களுக்கு குறைவாக பீரியட் ஏற்படுகிறது என்றால் நாம் இதனை irregular periods என்போம். அதாவது நமக்கு சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு ஆகும், அப்படி இல்லாமல் 35 நாட்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதவிலக்கு ஏற்படாமல் நின்று போவது, இவையெல்லாம் PCOD இருப்பதனால் ஏற்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால் சினைப்பை உற்பத்தி நடக்காமல் போவது. அப்படி என்றால் மாதம்தோறும் நம் கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை வெளிப்படாமல் போகும். முறையற்ற மாதவிலக்கு இருக்கிற பெண்களுக்கு சில சமயங்களில் மாதவிலக்கு மிகவும் அதிக அளவில் இருக்கும். PCOD 30% பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தெரியும்.

தலைமுடி மிகவும் அதிகமாக உதிரும் அப்புறம் முகம், மார்பு, முதுகு, வயிறு உதட்டிற்கு மேல் கீழ், அதாவது ஆண்களைப் போல் மீசை தாடி முடி முளைக்க ஆரம்பிக்கும். PCOS பிரச்சினை இருக்கிற பெண்களுக்கு 70% ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கப்படுகிறது. இதனால்தான் இந்த மாதிரியான தேவையற்ற ரோமங்கள் உடம்பில் ஏற்படுகிறது.

PCOD இருக்கிறவங்களுக்கு பொதுவாகவே உடல் எடை அதிகரிக்கும். இடுப்பு பகுதியை விட அடிவயிற்றில் அதிக அளவு தசை போட காரணமும் ஆன்ட்ரோஜன் அளவு அதிகமாவதுனால்தான். ஒருவேளை பிசிஓடி இருந்தும் நம் கர்ப்பம் அடைந்தால் நம் உடம்பில் அதிக அளவு இன்சுலின் இருப்பதாலோ ரொம்ப தாமதமான சினைமுட்டை உற்பத்தி நாள் அதாவது ஓவலேசன், கருமுட்டையின் தரத்தில் ஏற்படும் பிரச்சனை அல்லது கருமுட்டை நம் கர்ப்பப்பையில் இருக்கிற அமைப்பினாலும் கருச்சிதைவு ஏற்படலாம். இதனால் நீங்கள் செய்கின்ற ஒரு செயலிலும் பொறுமையும் ஆரோக்கியமான உணவும் அதிக அளவு தூக்கமும் உங்களுக்கு தேவைப்படும்.

ஒழுங்கற்ற உணவு முறையும் சினைப்பை நீர்க் கட்டி வர காரணம் என்று நீங்கள் கேட்டால் கண்டிப்பாக ஆமாம் ஒழுங்கற்ற உணவுமுறை ஹார்மோன் சுரப்பில் சிக்கலை ஏற்படுத்தி சினைப்பை நீர்க்கட்டிகளை உருவாக்கும். இப்படி உருவாகிற சினைப்பை நீர்க்கட்டி, ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிக அளவில் சுரக்கும் இதனால்தான் முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது முற்றிலும் தடைபடும். அதாவது உங்களுக்கு மாதவிலக்கு வருவது அப்படியே நின்றுவிடும்.

இதனால் பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது அல்லது குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கீரை, பருப்பு, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில் நாம் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

Share

Leave a Reply