foods to eat during pregnancy

Foods must be taken during pregnancy – Folic Acid Benefits

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

       பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கர்ப்ப காலம் என்பது ஒரு முக்கியமான தருணம் ஆகும். அந்த தருணத்தில் கர்ப்பிணி பெண்கள் தன்னையும் தன் வயிற்றில் வளரும் சிசுவையும் ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. எனவே அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது கட்டாயமாக அமைகிறது.

      கர்ப்பகாலத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்வது எதற்காக எடுத்துக் கொள்வது என்பதை பற்றி அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அறிந்திருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவானது உங்களையும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையும் நேரடியாக பாதிக்கிறது. ஆதலால் ஆரோக்கியமான உணவு முறையை கையாளுவது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குறைப்பிரசவம், குறைந்த எடை பிறப்பு, பிறப்பு குறைபாடுகள் போன்றவற்றிலிருந்து நம் குழந்தையை நாம் பாதுகாக்கலாம்.

ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

folic acid and protein

       ஃபோலிக் அமிலத்தை ஃபோலேட் அல்லது வைட்டமின் பி9 என்று அழைக்கப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஏனென்றால் குழந்தையின் நரம்பு குழாய் வளர்ச்சிக்கும், நஞ்சுக்கொடி வளர்ச்சிக்கும் இவை பெரும் பங்கு வகிக்கிறது. இது குழந்தையின் மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தை உருவாக்குகிறது.

       இந்த ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளின் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்கலாம். இந்த ஃபோலிக் அமிலம் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் குறை பிரசவத்தை தடுக்கிறது. பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டை, கீரைகள், கொட்டைகள் மற்றும் விதைகள், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள் ஆகும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

       வயிற்றில் வளரும் குழந்தையின் திசுக்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் புரதச்சத்து மிகவும் உதவியாக இருக்கும். நஞ்சு கொடியின் வளர்ச்சிக்கும், கர்ப்பப்பைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும் இந்த புரதச்சத்து பயன்படுகிறது. அதுவும் மெலிந்த புரதங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அமினோ அமிலங்களை தருகிறது. எனவே மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவுகளான கோழி, மீன், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

calcium rich foods

       குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு இந்த கால்சியம் மிகவும் உதவுகிறது. வயிற்றில் உள்ள குழந்தையின் நரம்புகள், தசைகள் மற்றும் இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கும் இந்த கால்சியம் தேவைப்படுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கும் இந்த கால்சியம் தேவைப்படுகிறது.

      கால்சியம் நிறைந்த உணவுகளான பால், இலை கீரைகள், தயிர், பாலாடை கட்டி, ஆரஞ்சு, சால்மன் மீன், கருப்பு பீன்ஸ், பாதாம் பருப்பு, அத்திப்பழம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

iron rich foods

        வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கு இந்த இரும்புச்சத்தானது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் உங்கள் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதன் மூலம்  உங்களுக்கும், உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது. ரத்தத்தின் அளவு அதிகரிக்க நமக்கு இரும்புச்சத்து மிகவும் உதவியாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாகத்தான் ரத்த சோகை, குறைப்பிரசவம் மற்றும் குழந்தை குறைந்த எடையுடன் பிறப்பது போன்றவை ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு இறைச்சி, கோழி, மீன், பருப்பு வகைகள், கீரை வகைகள் மற்றும் தானிய வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல்

fruits and vegetables

       பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகமாக உள்ளது. அனைத்து சத்துக்களும் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. ஆதலால் கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உணவில் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது.

முழு தானியங்களை எடுத்துக் கொள்ளுதல்

healthy fats and whole grains

       ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தேவையான வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக முழு தானியங்களில் உள்ளது. அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. ஓட்ஸ், பழுப்பு அரிசி, முழு கோதுமையில் செய்த ரொட்டி ஆகியவை முழு தானியங்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும்.

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

       கர்ப்ப காலத்தின் போது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் குழந்தையின் மூளை மற்றும் கண்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது. மத்தி, சால்மன், முட்டைகள், அவகாடோ, ஆலிவ் எண்ணெய், விதைகள், கொட்டைகள்(nuts) ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் ஆகும்.

நன்றி !!

Share

Leave a Reply