Healthy foods for hyperthyroidism

The best healthy diet food for Hyperthyroidism

ஹைப்பர் தைராய்டிசத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு பட்டியலை பற்றி இங்கு பார்ப்போம்.

      உங்களுக்கு எந்த விதமான தைராய்டு உள்ளது என்பதை உங்களது மருத்துவ ஆலோசகரை அணுகி உறுதி செய்து கொள்ளுங்கள். தைராய்டு சுரப்பியானது அதிக அளவு தைராய்டு ஹார்மோன்களை(T3 & T4) உற்பத்தி செய்வதை ஹைப்பர் தைராய்டிசம் என்று கூறப்படுகிறது. இந்த ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய மற்றும் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளை பற்றி இனி விரிவாக காண்போம்.

ஹைப்பர் தைராய்டிசத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

கால்சியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுதல்

calcium rich foods

       இந்த ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு கால்சியம் அளவு மிகவும் குறைவாக இருக்கும். ஆதலால் எலும்புகள் மிகவும் பலவீனமாக இருக்கும். ஏனென்றால் இந்த கால்சியம் பற்றாக்குறையினால் எழும்பானது தேய்மானம் அடைகிறது அல்லது எலும்பு அரிப்பு நோய்க்கு காரணமாக அமைகிறது.

      இந்த கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு ஏற்படும் எலும்பு அரிப்பு நோயிலிருந்து பாதுகாக்கலாம் மற்றும் எலும்பை வலுவடைய செய்யலாம். பால், சீஸ், தயிர், கீரை வகைகள், பாதாம், எள், சியா விதைகள், சால்மன் மீன்கள், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றில் கால்சியமானது அதிக அளவு நிறைந்துள்ளது.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

vitamin d Hyperthyroidism

      வைட்டமின் டி நிறைந்த உணவுகள் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு ஒரு சில காரணங்களால் நன்மையை தருகிறது. வைட்டமின் டி நம் உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் உதவுகிறது. இது ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மிகவும் முக்கியமாக அமைகிறது.

     சால்மன் மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு, பால் மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளில் இருந்து நமக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. சூரிய ஒளியில் இருந்தும் நமக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. இந்த ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு இந்த இரண்டு மூலங்களிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி அளவு போதுமானதாக கிடைக்கவில்லை என்றால் மருத்துவரின் பரிந்துரைப்பின்படி வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

முழு தானியங்கள் உண்ணுதல்

      ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்வதால் சில நன்மைகளை தருகிறது. இந்த முழு தானியமானது நார்ச்சத்தின் ஒரு நல்ல மூலமாகவும், இது செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. சில சமயங்களில் இந்த ஹைப்பர் தைராய்டிசம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது செரிமான மாற்றத்தை சீராக்குகிறது.

       இந்த முழு தானியங்கள் சிக்கலான கார்போஹைட்ரேட்டின் மூலமாகவும் உள்ளது. ஹைப்பர் தைராய்டிசத்தின் போது ஏற்படும் எடை இழப்பை சரி செய்ய இவை பயன்படுகிறது. பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மெலிந்த புரதம் நிறைந்த உணவுகள்

lean protein

       உடலில் உள்ள உறுப்புகள், சதைகள் மற்றும் எலும்புகள் உட்பட திசுக்களின் ஆரோக்கியத்திற்கு புரதம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எனவே போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யலாம். மெலிந்த புரதம் நிறைந்த உணவுகள் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்தவும், நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும் உதவுகிறது.

      கோழி, மீன், மாட்டு இறைச்சி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை மெலிந்த புரதம் நிறைந்த உணவுக்கான சில எடுத்துக்காட்டுகள் ஆகும். அதிக புரதம் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனென்றால் இதுவே இதய நோய்க்கு காரணமாக அமையும். சால்மன், டூனா மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நம் இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

செலினியம் நிறைந்த உணவுகள்

       தைராய்டு செயல்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இந்த செலினியம் உள்ளது. செலினியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உள்ள இருபாலருக்கும் நன்மையை தருகிறது. எனவே தேவையான அளவு செலினியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கலாம். மேலும் செலினியம் ஒரு ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து நமது உடலை பாதுகாக்க உதவுகிறது.

       பிரேசில் கொட்டைகள், டூனா, மத்தி, இறால், கோழி, முட்டை மற்றும் காளான்கள் ஆகியவை செலினியம் நிறைந்த உணவுகள் ஆகும். மேலும் அதிக அளவு செலினியம் எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகள் ஏற்படும். ஆதலால் நம் உடலுக்கு தேவையான செலினியத்தின் அளவை சுகாதார ஆலோசகரின் உதவியுடன் தெரிந்து கொண்டு அதன்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலுவை (cruciferous) காய்கறிகள்

cruciferous vegetables

        பொதுவாக cruciferous காய்கறிகளில் நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த வகையான காய்கறிகள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. இந்த காய்கறிகளில் கோய்ட்ரோஜன்கள் உள்ளன. அவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. காலிஃப்ளவர், முட்டை கோஸ், பீன்ஸ் வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, சோளம், முள்ளங்கி, பீட்ரூட், ப்ரோக்கோலி, டர்னிப் இந்த வகையான காய்கறிகளை தினமும் ஒன்று நம் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.

ஹைப்பர் தைராய்டிசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாத உணவுகள்

அயோடின் நிறைந்த உணவுகள்

iodine rich foods

       தைராய்டு சுரப்பிக்கு தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய இந்த அயோடின் மிகவும் உதவுகிறது. மேலும் நம் உடலில் அயோடின் அதிகமாக இருக்கும் போது அவை தைராய்டு சுரப்பியை தூண்டி தைராய்டு ஹார்மோனை இன்னும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. ஆதலால் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் அயோடின் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கடற்பாசி, அயோடின் உப்பு போன்றவற்றை ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

டீ, காபி ஆகிவற்றை தவிர்த்தல்

tea coffee

       டீ மற்றும் காபியில் உள்ள காஃபினானது பதட்டம், நடுக்கம் மற்றும் விரைவான இதயத்துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இவை ஹைப்பர் தைராய்டு அறிகுறிகளை அதிகப்படுத்தக்கூடிய ஒரு தூண்டுதல் ஆகும். ஆதலால் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் டீ மற்றும் காபி ஆகியவற்ற தவிர்ப்பது நல்லது. மேலும் காஃபின் உள்ள சோடா மற்றும் குளிர்பானங்கள், சப்ளிமெண்ட் ஆகியவற்றை தவிர்ப்பதும் நல்லது.

சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

      சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது. இது ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு கவலை மற்றும் எரிச்சல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். மேலும் ரத்த சர்க்கரை அளவானது அதிகரித்து விரைவாக குறையும் போது பதட்டம் மற்றும் படபடப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

      எனவே சோடா, இனிப்புகள், சர்க்கரை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக இருக்கும். இந்த சோடியம் ஆனது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு தைராய்டு ஹார்மோன்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க காரணமாக அமைகிறது. மேலும் அதிகப்படியான சோடியத்தை உட்கொள்வதால் இந்த அறிகுறிகள் உருவாகிறது. 

க்ளுட்டன் (Gluten) தவிர்த்தல்

gluten free

       ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டு வகையான தைராய்டு உள்ளவர்கள் க்ளுட்டன் பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் க்ளுட்டன் உட்கொள்ளும் போது நம் உடலில் நமக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி சிறுகுடலில் வீக்கம் மற்றும் சேதத்தை உருவாக்குகிறது. எனவே இவை தன்னுடன் தாக்க கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. கோதுமை, பார்லி, கம்பு போன்ற க்ளுட்டன் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

நன்றி !!

Share

Leave a Reply