Payanali useful blog for healthy food diet healthy pregnancy women care first 3 months

Best 6 important foods to include in the diet during the first 3 months of pregnancy

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் நாம் உணவில் சேர்க்கவேண்டிய முக்கியமான உணவுகளை பார்க்கலாம்

சிட்ரஸ் பழங்கள்

பொதுவாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு வாந்தி, தலை சுற்றல் குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அப்போது சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்வார்கள். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது, நாளொன்றுக்கு, ஒரு சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இது நார்ச்சத்து குறைந்த அளவு என்பதால், அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

எலுமிச்சை பழம் ஆரஞ்சு நெல்லிக்காய் போன்றவை எடுத்துக்கொள்ளுங்கள் இதில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்க செய்யும்.

பீன்ஸ் வகைகள்

கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாத காலங்களில் மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் வராமலும் தடுக்கும்.

கர்ப்பமாக இருக்கும்போது மலச்சிக்கலை கவனிக்காமல் நாம் விட்டால், இது மூல நோய் வர காரணம் ஆகிவிடும். பின்பு மலக்குடல் பகுதியில் இருக்கும் நரம்பு வீங்குவதால் கருவில் வளரும் குழந்தையின் கரு வளர்ச்சியை பாதிக்கும். அதனால் பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டை

 முட்டை கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிக்கு தேவையான புரத அளவை சரி செய்கிறது. விட்டமின் டி மற்றும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது, இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும். எலும்புக்கு நல்ல உறுதியையும் தருகிறது. தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கீரைகள்

கர்ப்பமாக இருக்கும் போது மிக முக்கிய உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு என்றால் அது கீரைவகைகள் தான். இதில் விட்டமின் பி போலிக் ஆசிட் அதிக அளவில் இருக்கிறது.

போலிக் ஆசிட் கருவின் மூளை மற்றும் முதுகு எலும்புத் தொடர்பான நரம்பு குழாய் குறைபாடு அல்லது கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. முருங்கைக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி தினமும் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

பால்

 பாலில் கால்சியம் அதிக அளவில் இருக்கும். பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பால், தயிர், வெண்ணை, நெய், மோர், பாலாடைக்கட்டி இவையெல்லாம் நம் உணவில் கட்டாயம்.

டிரை ஃப்ரூட்

பாதாம், பிஸ்தா, வால்நட், கருப்பு திராட்சை, உலர் திராட்சை போன்றவை எல்லாம் நீங்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டு வாருங்கள். பாதாம் இரவில் மூன்று எடுத்து நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்கள் உடலுக்குத் தேவையான அதிக அளவு கிடைக்கும்.

பெண்கள் கருவுயிற்ற முதல் மூன்று மாதங்கள் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . மேல கூறிய அணைத்து உண்ணவும் உங்கள் கர்ப்பகால முழுவதும் எடுத்துக் கொள்ளலாம். இது போல தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை படிக்கவும் .

Share

Leave a Reply